மியாமி டென்னிஸ் காலிறுதி போட்டிக்கு அமெரிக்கா வீராங்கனை தகுதி!

Friday, March 30th, 2018

மியாமி டென்னிஸ் காலிறுதி போட்டிக்கு வீனஸ் வில்லியம்ஸ் தகுதி பெற்றுள்ளார். சர்வதேச மியாமி  டென்னிஸ் போட்டிகள்  அமெரிக்காவின்  மியாமி நகரில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இப் போட்டியில் காலிறுதி சுற்றுக்கு முன்னைய ஆட்டம் இடம்பெற்றுள்ளது.

நடைபெற்ற போட்டியில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனை வீனஸ் வில்லியம் மற்றும் இங்கிலாந்து வீராங்கனை ஹோகன்னா கோன்டாவும் மோதியுள்ளனர்.

இருவருக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் வீனஸ் வில்லியம்ஸ் 5:7,  6 :1 மற்றும் 6 : 2 என்ற கணக்கில் கோன்டாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Related posts: