மிட்செல் ஸ்டாக் மிகப்பெரிய ஆயுதம் என்கிறார் மிட்செல் மார்ஷ்!

Saturday, March 4th, 2017

இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில், மிட்செல் ஸ்டாக் தங்களது மிகப்பெரிய ஆயுதம் என அவுஸ்ரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.

இந்திய ஆடுகளங்களில் சுழற்பந்து வீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்துவார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாறாக வேகப்பந்து வீச்சாளர்களின் கையும் ஓங்கியது.

அதிலும் குறிப்பாக அவுஸ்ரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டாக், இந்திய அணியின் முக்கிய துடுப்பாட்ட வீரர்களை ஆட்டமிழக்க செய்தார். இந்நிலையில், இத்தொடரில், மிட்செல் ஸ்டாக்கின் முக்கியதுவம் குறித்து மிட்செல் மார்ஷ் கூறுகையில்,

‘எங்களது வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு குடைச்சல் கொடுத்தால் சிறப்பாக இருக்கும். அவர் சில விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்று நம்புகிறேன். உலகின் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஸ்டார்க்கும் ஒருவர்.

இங்குள்ள சூழலை வைத்து அனைவரும் சுழற்பந்து வீச்சாளர் குறித்து தான் பேசுகிறோம். ஆனால் இன்னும் அவர் தான் எங்களது மிகப்பெரிய ஆயுதம். அவரும், ஹெசில்வுட்டும் பழைய பந்தில் ரிவர்ஸ் ஸ்விங் செய்வதில் திறமையானவர்கள். அதன் மூலம் துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடி கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்’ என கூறினார்.

78col140954028_5157199_17012017_AFF_CMY

Related posts: