மிட்சல் ஸ்டார்க்கின் அபாரம்:  162 ஓட்டங்களுக்கு சுருண்டது தென்னாபிரிக்கா !

Saturday, March 3rd, 2018

!

அவுஸ்திரேலிய – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. தென்னாபிரிக்காவின் டர்பனில் இந்தப் போட்டி இடம்பெறுகிறது.

நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடியிருந்த தென்னாபிரிக்க அணி, சகல விக்கட்டுக்களையும் இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது. ஏபிடி வில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் 71 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

தென்னாபிரிக்க அணியின் மூன்று வீரர்கள் ஓட்டம் எதனையும் பெறாமலும், நான்கு வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சில், அவுஸ்திரேலிய அணியின் மிட்சல் ஸ்டார்க்  34 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களை வீழ்த்தியிருந்தார். முன்னதாக அவுஸ்திரேலிய அணி, தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 351 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: