மிகப்பெரிய கிரிக்கெற் மைதானம் அவசியமா என்று மஹேல ஜெயவர்தனவுக்கு இலங்கை கிரிக்கெட் சபை பதிலளிப்பு!

Tuesday, May 19th, 2020

இலங்கையில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அவசியமா என்று விமர்சித்துள்ள இலங்கை அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜெயவர்தனவுக்கு இலங்கை கிரிக்கெட் சபை பதிலளித்துள்ளது.

நகர்ப்புற பகுதியில் கிரிக்கெட் போட்டிகளை பார்வையிடுவதற்கான கேள்விகள் அதிகரித்திருப்பதாக கிரிக்கெட் சபை கூறியுள்ளது.

அதேபோல 25 ஆயிரம் தொடக்கம் 40 ஆயிரம் வரையான இரசிகர்கள் ஒரே நேரத்தில் பார்வையிடக்கூடிய வகையில் மைதானம் ஒன்றின் அவசியத்தையும் இலங்கை கிரிக்கெட் சபை வலியுறுத்தியுள்ளது.

மேலும் ஹோமாகம பகுதியில் இந்த பெரிய மைதானத்தை நிர்மாணிப்பதற்கான செலவினை கிரிக்கெட் சபையே ஏற்கும் என்றும் இலங்கை கிரிக்கெட் சபை அறிவிக்கப்பட்டுள்ளது

இதனிடையே

ஹோமாகம பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள இலங்கையின் மிகப்பெரிய கிரிக்கெட் விளையாட்டு மைதானத்திற்கு எதிராக கருத்து வெளியிட்ட இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தனவுக்கு ஆதரவாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் அவரது சகோதரரான யோசித்த ராஜபக்ச ஆகியோர் எதிர்த்து டுவிட் செய்துள்ளனர்.

எந்தவொரு விளையாட்டுத்துறையிலும் மைதானம் போன்ற அபிவிருத்திகள் செய்யத்தான் வேண்டும் ஆனால் தற்போதைய சூழலில் அது அவசியமாகாது என நாமல் ராஜபக்ச டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சுகாதாரத்துறை பாரிய சவாலை எதிர்கொண்டுள்ள நிலையில் இப்படியான மிகப்பெரிய முதலீட்டுடன் மைதானம் அமைப்பு தேவைதானா என்று ரக்பீ வீரராகிய யோசித்த ராஜபக்ச டுவிட்டரில் கேட்டுள்ளார்.

அதேபோல இலங்கை அணியின் முன்னாள் வீரரான ரொசான் மஹானாமவும் இந்த மைதானம் அமைப்புத் திட்டத்தை எதிர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: