மாலிங்க மீண்டும் அணிக்கு – திலான் சமரவீர உறுதி!

Tuesday, August 7th, 2018

இலங்கை உலகக் கிண்ண அணியில் லசித் மாலிங்க உள்ளதாகவும், அவர் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக இருபதுக்கு – 20 போட்டியில் விளையாடுவார் என்றும் பல்லேகல மைதானத்தில் கடந்த 05ஆம் திகதி இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் திலான் சமரவீர தெரிவித்திருந்தார்.
எனினும், தேர்வுக் குழு, பிரதான பயிற்சியாளர் மற்றும் அணியின் தலைவர்களது தீர்மானத்திற்கு இணங்கவே மாலிங்கவை அணியில் சேர்ப்பது குறித்து இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Related posts: