மாலிங்க – திசர இடையே விரிசல் – அவதானம் செலுத்துகிறது இலங்கை கிரிக்கெட் நிறுவனம்!

Monday, January 7th, 2019

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் லசித் மாலிங்க மற்றும் சகலதுறை வீரர் திஸர பெரேரா ஆகியோர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியான கருத்துகள் குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அவதானம் செலுத்தி வருவதாக கிரிக்கெட் நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட்டின் பேச்சாளர் ஒரு கருத்துத் தெரிவிக்கையில்;

இது குறித்து இலங்கை கிரிக்கெட் அணி முகாமைத்துவத்தினருக்கும், வீரர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெறுகிறது.

இதேவேளை லசித் மாலிங்கவின் மனைவியான டானியா பெரேரா அண்மையில் அவரது முகநூல் பக்கத்தில் இலங்கை அணியின் சக வீரர் திசர பெரேராவின் புனைப் பெயரான ‘Poor Panda’ எனும் தலைப்பில் புகைப்படமொன்றினை வெளியிட்டு பதிவு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: