மாலிங்க தலைமை தாங்கிய இலங்கை அணி தொடர் தோல்வி – அணிக்கு புதிய தலைமை!

Tuesday, March 12th, 2019

இலங்கையின் ஒருநாள் கிரிக்கெட்டின் தலைமையில் மீண்டும் மாற்றத்தினை ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்னாபிரிக்கா அணியுடன் இடம்பெற்ற ஒருநாள் போட்டிகளுக்கு லசித் மாலிங்க, தலைமை தாங்கிய நிலையில் குறித்த போட்டிகள் தொடர் தோல்விகளை தழுவியிருந்தது. லசித் மாலிங்க தலைமையில் இதுவரையில் 07 ஒருநாள் போட்டிகள் இடம்பெற்ற நிலையில் குறித்த 07 போட்டிகளும் தோல்வியினையே சந்தித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆகையால் எதிர்வரும் உலகக் கிண்ண தொடருக்கு இலங்கை அணி சார்பில் புதிய தலைமை ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என கிரிக்கெட் நிறுவனம் ஒருநிலையாக இருப்பதாக கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெஸ்ட் தலைவர் திமுத் கருணாரத்னவை ஒரு நாள் போட்டிகளுக்கு தலைவராக நியமிக்க யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெரிவுக் குழு தெரிவிக்கையில், அனைத்து வீரர்களையும் ஒன்றிணைத்து செயற்படக் கூடிய வகையிலான தலைவர் ஒருவரை தெரிவு செய்வது காலத்தின் தேவை என தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: