மாலிங்கவின்  ஊடகங்களுக்கான விசேட அறிவிப்பு!

Tuesday, September 20th, 2016

இன்னும் 03 வருடங்களுக்கு தான் ஒருநாள் மற்றும் இருபதுக்கு20 போட்டிகளில் பங்கேற்க எண்ணியுள்ளதாகவும், இலங்கை அணிக்கு தான் தேவையாயின் என்னை அழைக்கலாம், அதுவரை தான் பயிற்சிகளில் ஈடுபடுவதாகவும் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

மாலிங்கவின் காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக மேற்கொண்டுள்ள சத்திரசிகிச்சையினால் அவர் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக கதைகள் பரவலாக பரவியதினை தொடர்ந்தே மாலிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;

“நான் 2019ம் ஆண்டு வரை கிரிக்கெட் விளையாடுவ்வேன். கிரிக்கெட் மட்டும். அதில் IPL, Big Bash, Caribbean Premier League மற்றும் இலங்கையில் ஆடும் உள்ளூர் விளையாட்டாக இருந்தாலும் எனக்கு ஆட்சேபனையில்லை. நான் எதிர்வரும் 2019ம் ஆண்டு வர ஆட நினைக்கிறன். அதற்கிடையில் நான் இலங்கை அணிக்கு தேவைப்படின் நான் விளையாடத் தயாராகவே இருக்கின்றேன். ஆனால், நான் தேர்வு செய்யப்படாவிடின் அதற்கு நான் பொறுப்பும் இல்லை. அது தான் நான் சொன்னேன் கிரிக்கெட் விளையாடுவேன் என்று..” எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

malinga-3

Related posts: