மாலிங்கவின் அபாரப் பந்துவீச்சு – கிண்ணத்தைக் கைப்பற்றியது மும்பை இந்தியன்ஸ்!

Monday, May 13th, 2019

12ஆவது இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் சம்பியன் பட்டத்தை 4ஆவது தடவையாக இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்க பிரதிநிதித்துவப்படுத்தும் மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று(12) கைப்பற்றி இருந்தது.

ஐதராபாத்தில் இடம்பெற்ற இறுதி போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்த நிலையில், 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கட்டுக்களை இழந்து 149 ஓட்டங்களை பெற்றது.

150 என்ற தமது வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கட்டுக்களை இழந்து 148 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஜஸ்ப்ரிட் பும்ரா தெரிவு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: