மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் ரியோவில் ஆரம்பம்!

பிரேசிலின் ரியோ நகரில் மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், (பாரா ஒலிம்பிக்) கண்கவர் விழா தொடக்க விழாவுடன் முறைப்படி ஆரம்பித்தவைக்கப்பட்டது.
ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள மரக்கானா மைதானத்தில் இசை, வானவேடிக்கை மற்றும் கண் பார்வையற்ற நடன கலைஞர்கள் நடத்திய நடன நிகழ்ச்சி ஆகியவை, அங்கு குழுமியிருந்த 4000-க்கும் அதிகமான தடகள வரவேற்கும் விதமாக அமைந்தது.
அரசியல் கொந்தளிப்பு நிலவி வரும் பிரேசிலில், மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழாவுக்கு அதிபர் மிஷல் டெம்மர் மரக்கானா மைதானத்துக்கு வந்திருந்த போது , அங்கிருந்த மக்களில் சிலர், அவர் மீதான தங்களின் வெறுப்பை காட்ட ஒலி எழுப்பினர்.
மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கான நிதி வரவில் பற்றாக்குறை, மோசமான நுழைவுச் சீட்டு விற்பனை மற்றும் அரசின் ஆதரவோடு ஊக்க மருந்து பயன்படுத்திய ரஷ்யா அணிக்கு தடை ஆகிய பல பிரச்சனைகளை பாராலிம்பிக் போட்டிகள் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|