மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக்: ரஷ்ய அணிக்கு தடை!

Wednesday, August 24th, 2016

அரசின் ஆதரவுடன், ரஷ்ய தடகள வீரர்கள் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதியான நிலையில், ரியோவில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் ரஷ்ய அணி முழுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு தனது கோபத்தை ரஷியா வெளிப்படுத்தியுள்ளது.

ரஷ்ய பிரதமர் திமித்ரி மெட்வடேவ், இந்தத் தீர்ப்பு ஒரு இழிந்த இரட்டை நிலை கொண்ட தீர்ப்பு என விவரித்துள்ளார்; மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு இது ஒரு பின்னடைவு எனவும் தெரிவித்துள்ளார். ரஷ்ய ஊக்க மருந்து தொடர்பான இந்த விசாரணை இருண்ட, அரசியல் நோக்கம் கொண்ட கேவலமான செயல் எனவும் தெரிவித்துள்ளார்.

தடை விதிக்கப்பட்ட காரணங்களுக்கு எதிராக ரஷ்யா எந்த ஆதரங்களையும் சமிர்பிக்கவில்லை என விளையாட்டுகளுக்கான நடுவர் மன்றம் தெரிவித்துள்ளது. விளையாட்டுகளுக்கான நடுவர் மன்றம் அளித்த இந்த தீர்ப்பு முதுகில் குத்துவது போன்றது என ரஷ்ய மாற்றுத்திறனாளிகள் கோபத்துடன் தெரிவித்துள்ளனர்.