மார்டினா ஹிங்கிஸ் ஓய்வு !

Sunday, October 29th, 2017

சுவிட்சர்லாந்தின் டென்னிஸ் வீராங்கனையான மார்டினா ஹிங்கிஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இரட்டையர்களுக்கான டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார் மார்டினா ஹிங்கிஸ் 37 வயதாகும் ஹிங்கிஸ், இதற்கு முன்பாக 2003ம் ஆண்டு ஓய்வு பெற்றதாக அறிவித்து 2007ம் ஆண்டு மறுபடியும் விளையாடத் தொடங்கினார்.

இந்தாண்டுக்கான விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் இரட்டையருக்கான சாம்பியன் பட்டங்களை வென்ற நிலையில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான தருணம் என தெரிவித்துள்ள ஹிங்கிஸ், டென்னிஸுக்கு அறிமுகமாகி 23 ஆண்டுகளாகிவிட்டன.தற்போது எனது மனம் வலிமையாக இருந்தாலும் உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.இவர் தனது 15வது வயதிலேயே கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

Related posts: