மாத்தறையில் 43வது தேசிய விளையாட்டுப் போட்டி!

Thursday, May 25th, 2017

43வது தேசிய விளையாட்டுப் போட்டியின் 6 போட்டி நிகழ்ச்சிகளை மாத்தறை கொட்டுவில தேசிய விளையாட்டு மைதானத்தில் நடத்துவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்தப் போட்டிகளை சப்ரகமுவ மாகாண விளையாட்டு தொகுதியில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.இதற்கமைய, கரப்பந்தாட்டம், கபடி, உதைபந்தாட்டம். குத்துச்சண்டை, வலைப்பந்து ஆகிய போட்டிகள் இரத்தினபுரியில் இருந்து மாத்தறைக்கு மாற்றப்பட்டுள்ளன. விளையாட்டுப் போட்டியின் மெய்வல்லுனர் போட்டிகள் செப்ரெம்பர் 15ம் திகதி முதல் 18ம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: