மாகாணங்களுக்கு இடையேயான நட்பு ரீதியான உதைப்பந்தாட்டப் போட்டி வடமாகாண தெரிவு அணி வெற்றி!
Tuesday, October 11th, 2016
அம்பாறையில் இடம்பெற்ற கிழக்கு மாகாண தெரிவு அணி மற்றும் வடக்குமாகாண தெரிவு அணிகளுக்கு இடையிலான நட்புரீதியான உதைப்பந்தாட்டப் போட்டியில் வடக்கு தெரிவு அணி 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
வடக்கு அணி சார்பில் பிறேம் குமார், கஜந்தன் ஆகிகோர் கோல்களை தமது அணிக்காக பெற்றுக் கொடுத்ததுடன் வடக்கு அணிக்கு பிரேம் குமார் (பீமா) தலைவராகவும் அன்ரன் சாள்ஸ் (தங்கன்) உபதலைவராகவும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. வடமாகாண அணிக்கு பரவலாக எல்லா மாவட்டத்திலும் இருந்தும் எல்லா லீக்கில் இருந்தும் வீரர்கள் தெரிவு செய்யப்பட்ட போதிலும் இறுதி நேரத்தில் தவிர்க்க முடியாத காரணங்களினால் சில மாவட்ட வீரர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள சில லீக்கின் வீரர்களும் கலந்து கொள்ளாத காரணத்தினால் ஏற்பாட்டாளர்கள் பெரும் சிரமத்தின் மத்தியிலும் மேலதிகமான யாழ்.மற்றும் வவுனியா மாவட்ட வீரர்களை உள்ளடக்கியே நட்பு ரீதியான போட்டியினை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|