மஹிந்தானந்தவிடம் விளையாட்டத்துறை அமைச்சின் விசேட விசாரணை பிரிவுக் குழுவினர் விசாரணை – அனைத்து ஆவணங்களும் கையளிப்பு!

Wednesday, June 24th, 2020

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் குற்றச்சாட்டு தொடர்பில் விளையாட்டத்துறை அமைச்சின் விசேட விசாரணை பிரிவுக் குழுவினர் நாவலப்பிட்டியில் உள்ள அவரது காரியாலயத்திற்கு சென்று வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

அண்மையில் ஊடகம் ஒன்றில் பேசிய மஹிந்தானந்த, ‘2011ம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் பணத்திற்காக கிண்ணத்தை தாரைவார்த்ததாக’ தெரிவித்து, ஆட்ட நிர்ணய குற்றம்சாட்டியிருந்தார். அது தொடர்பிலேயே அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

இதன்போது தான் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பிலான அனைத்து ஆவணங்களும் மஹிந்தனந்தவினால் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிபபிடத்தக்கது.

Related posts: