மஹாமாரி வெற்றிக்கிண்ணத்தை வென்றது கரம்பொன் ஹீரோ ஸ்ட்டர்!

மஹாமாரி வெற்றிக்கிண்ண கிரிக்கெற் தொடரின் 2016 ற்கான வெற்றிக்கிண்ணத்தை கரம்பொன் ஹீரோ ஸ்ட்டர் விளையாட்டக்கழகம் தனதாக்கிக்கொண்டது.
தீவகவலையத்தைச் சேர்ந்த 22 அணிகள் பங்குபற்றிய குறித்த தொடரின் இறுதிப் போட்டி நேற்று (24) ஊர்காவற்றுறை புளியங்கூடல் மஹாமாரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
கடந்த ஒரு வாரமாக நடைபெற்றுவந்த குறித்த போட்டியின் இறுதிப்போட்டியில் கரம்பொன் ஹீரோ ஸ்ட்டர் அணியும் அல்லைப்பிட்டி சென்.பிலிப்ஸ் அணியும் மோதிக்கொண்டன. எனினும் சிறப்பான செயற்பாடுகளின் மூலம் மஹாமாரி வெற்றிக்கிண்ணத்தை கரம்பொன் ஹீரோ ஸ்ட்டர் தனதாக்கிக்கொண்டது.
இப்போட்டியில் தொடராட்ட நாயகன் விருதை கரம்பொன் ஹீரோ ஈஸ்டர் அணியின் வீரர் குமரன் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இங்கிலாந்திற்கு மரண பயத்தை காட்டிய வங்கதேசம்!
நியூஸிலாந்தை வெள்ளையடித்தது இந்தியா!
8 ஆவது சதத்தினை பூர்த்தி செய்தார் திமுத் கருணாரத்ன!
|
|