மலேசிய ஓபன் பாட்மிண்டன் தொடர்: சிந்து, சாய்னா அதிர்ச்சித் தோல்வி!

மலேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நெவால் ஆகியோர் அதிர்ச்சித் தோல்வி கண்டுள்ளனர்..
மலேசியாவின் குச்சிங் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் பி.வி.சிந்து 21-18, 19-21, 17-21 என்ற செட் கணக்கில் சீனாவின் சென் யூஃபெயிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டார். சென் யூஃபெய் 1 மணி, 8 நிமிடங்களில் போட்டித் தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருந்த சிந்துவை வீழ்த்தினார்.
மற்றொரு முதல் சுற்றில் சாய்னா நெவால் 21-19, 13-21, 15-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் அகானே யமாகுசியிடம் தோல்வியடைந்தார். ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் அஜய் ஜெயராம் 21-11, 21-8 என்ற நேர் செட்களில் சீனாவின் கியாவ் பின்னை வீழ்த்தினார். ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மானு அத்ரி-சுமீத் ரெட்டி ஜோடி தங்களின் முதல் சுற்றில் 21-18, 18-21, 17-21 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் லியாவ் குவான் ஹாவ்-லூ சியா பின் ஜோடியிடம் தோல்வி கண்டது.
Related posts:
|
|