மலிங்க சூப்பர் குழுவிலிருந்து நீக்கம் – சூப்பர் குழு ஒப்பந்தத்திற்கு மூன்று வீரர்கள்?

Wednesday, October 12th, 2016

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் வீரர்கள் குறித்த ஒப்பந்தப் பத்திரம் இதுவரை வெளியிடப்படாத நிலையில் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க, குறித்த கைச்சாத்திடப்படும் அணி வீரர்களிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வாண்டுக்கான தேசிய ரீதியான ஒப்பந்தத்தில் சூப்பர் குழுவுக்கு வீரர்கள் மூவர் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.அது, இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ், உப தலைவர் தினேஷ் சந்திமால் மற்றும் சுழல் பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் ஆகியோர் உள்ளடங்குவர்.

இதுவரை ஒப்பந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வீரர்கள் குறித்து உத்தியோகபூர்வ தகவல்கள் இல்லாதவிடத்து, ஒப்பந்த பட்டியலில் உள்வாங்கப்படும் வீரர்கள் என 30 பேரினது பெயர்கள் எதிர்வுகூறப்பட்டுள்ளன.

ஏஞ்சலோ மேத்யூஸ்,தினேஷ் சந்திமால் ,ரங்கன ஹேரத்,குசல் மென்டிஸ், கௌஷால் சில்வா, தனஞ்சய த சில்வா, குசல் ஜனித் பெரேரா, தில்ருவன் பெரேரா, நுவன் பிரதீப், சுரங்க லக்மால், திமுத் கருணாரத்ன, துஷ்மந்த சமீர, லக்ஷனா சந்தகேன், ஜெப்ரி வேண்டர்சே, லஹிரு திரிமன்னே, மிலிந்த சிறிவர்தன, தனுஷ்க குணதிலக, லசித் மாலிங்க, தசுன் சானக, நிரோஷன் திக்வல்ல, சசித்திர சேனாநாயக்க, சச்சின் பத்திரன, உபுல் தரங்க, தம்மிக்க பிரசாத், ஏஞ்சலோ பெரேரா, திசர பெரேரா, ரொஷான் சில்வா, அமில அபோன்சு, சீக்குகே பிரசன்ன மற்றும் ஷாமிந்த எரங்க.

lasith-malinga

Related posts: