மலிங்காவுக்கு நோட்டீஸ்!
Wednesday, April 20th, 2016இலங்கை கிரிக்கெட் சபையின் அனுமதியில்லாமல் ஐபிஎல் போட்டியில் மலிங்கா கலந்துகொண்டது குறித்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் மலிங்கா ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார்.
இந்நிலையில், கால் முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக மும்பை அணியில் இருந்துவிலகுவதாக அறிவித்தார்.
இதற்கிடையில், இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் அனுமதி பெறாமல் போட்டியில் மலிங்கா கலந்துகொண்டார் என்றும், இதுகுறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கிரிக்கெட் வாரியம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மலிங்காவின் பதிலுக்கு பிறகு அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கிரிகெட் வாரியம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related posts:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் ஆரம்பம்!
இந்தியா தமது முதலாவது போட்டியை 2019 ஜுன் மாதம் 5ஆம் திகதியே -இந்திய கிரிக்கட்கட்டுப்பாட்டு சபை!
தென் ஆப்பிரிக்கா வெற்றி!
|
|