மலிங்கவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சச்சின்!

Thursday, August 30th, 2018

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவின் ஹேர்ஸ்டைலை கிண்டல் செய்து, வித்தியாசமான முறையில் சச்சின் டெண்டுல்கர் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.

இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லஷித் மலிங்கா, இன்று தனது 36வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். மலிங்காவின் பந்துவீச்சை போன்று, அவரது வித்தியாசமான ஹேர்ஸ்டைல் ரசிகர்களிடம் மிகவும் பிரபலம்.

இலங்கை அணிக்காக 30 டெஸ்ட்களில் 101 விக்கெட்டுகளும், 204 ஒருநாள் போட்டிகளில் 301 விக்கெட்டுகள் மற்றும் 68 டி20 போட்டிகளில் 90 விக்கெட்டுகளும் மலிங்கா வீழ்த்தியுள்ளார்.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் அவருக்கு கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், வித்தியாசமான முறையில் தனது ட்விட்டர் பக்கத்தில் மலிங்காவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ‘நான் மலிங்காவிற்கு எதிராக துடுப்பாட்டம் செய்ய களம் இறங்கும்போது அவரது ஹேர்ஸ்டைலை பார்க்க மாட்டேன். அவர் வீசும் பந்தைதான் பார்ப்பேன். என்னுடைய நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார்

Related posts: