மலிங்கவிற்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகர் பதவி!

Saturday, March 31st, 2018

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக பயிற்சிகளை ஆரம்பித்துள்ளார்.

கடந்த 10 வருடங்களாக ஐ.பி.எல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த லசித் மலிங்கவை அந்த அணி முதல் தடவையாக இம்முறை விடுவித்திருந்தது.

34 வயதாகும் லசித் மலிங்க கடந்த காலங்களில் இலங்கை அணிக்கு பாரிய சேவையாற்றிய முக்கிய வீரராவார்.

எனினும், தொடர் உபாதைகள் மற்றும் போதியளவு திறமைகளை வெளிப்படுத்தாமை உள்ளிட்ட காரணங்களால் அண்மைக் காலமாக இலங்கை அணியிலிருந்தும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: