மலிங்கவிற்கு இடமில்லை ஒருநாள் அணி அறிவிப்பு!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி திசார பெரேரா தலைமையில் அறிவிக்கப்பட்டது.
இறுதியாக பாகிஸ்தானுடன் விளையாடிய அணியிலிருந்து சந்திமல், குஷல் மெண்டிஸ், கப்புகெதர, சீக்குகே, பிரசன்னா, மிலிந்த சிறிவர்த்தன ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
லசித் மலிங்கவுக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. காயமடைந்நிருந்த அசேல குணரத்ன மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். வண்டெர்சி, அகில தனஞ்சய ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களுடன் சகலதுறை வீரர்களான சதுரங்க டி சில்வா மற்றும் சசித பத்திரன ஆகியோர் வாய்ப்புப் பெற்றுள்ளனர்.
எதிர்வரும் 10, 13, 17 ஆம் திகதிகளில் தர்மசால, மொஹாலி, விசாகப்பட்டிணம் ஆகிய நகரங்களில் போட்டிகள் இடம்பெறவுள்ளன. முதலிரு போட்டிகளும் காலை 10.30 க்கும் இறுதிப்போட்டி பகல் 1.30க்கும் இடம்பெறவுள்ளது.
அணி விபரம்: திசார பெரேரா(அணித்தலைவர்), உபுல் தரங்க, தனுஷ்க குணதிலக, நிரோஷன் திக்வெல, சதீர சமரவிக்கிரம, லஹிரு திரிமானே, அஞ்சலோ மத்யூஸ், அசேல குணரத்ன, சத்துரங்க டி சில்வா, சச்சித் பத்திரன, அகில தனஞ்சய, ஜெப்ரி வண்டெர்சி, துஷ்மந்த சமீர, சுரங்க லக்மால், நுவான் பிரதீப்.
Related posts:
|
|