மலிங்கவின் உலகக் கிண்ண வாய்ப்பு நிராகரிப்பு!

Saturday, May 26th, 2018

2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்க விளையாடமாட்டார் என கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்கசுமதிபால ஆங்கில ஊடகமொன்றுடனான நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இருபதுக்கு 20 போட்டிக்கான அணியில் அதிக விக்கெட்களை கைப்பற்றியுள்ள லசித் மலிங்க கடந்த சுதந்திர கிண்ண போட்டிகளில் உட்சேர்க்கப்படாமை குறித்தும், மலிங்கவினால் இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியாது போனதாக கூறும் கருத்துக்கள் உள்ளிட்டவை குறித்தும் வினவப்பட்டிருந்தது.

மேலும் மலிங்க குறித்து எதிர்வரும் காலங்களில் நம்பிக்கை வைப்பது கடினம் என்பதாலேயே தேர்வுக் குழு அவரை நிராகரித்துள்ளதாகவும், ஆதலால் மலிங்கவின் எதிர்காலம் குறித்து கூறுவதுகடினம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.