மருத்துவ அறிக்கைகளை வைத்தே மலிங்கவின் திர்காலம் தங்கியுள்ளது.!

Friday, September 23rd, 2016

சில மாதங்களாக உபாதைக்கு உள்ளாகியிருந்த லசித் மலிங்க தற்போது முற்றாக குணமாகியநிலையில் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த லசித் மலிங்க, எதிர்வரும் சிம்பாப்வே போட்டிகளுக்கு எதிராக விளையாட என்னை அழைத்தார்கள் என்றால் நான் கண்டிப்பாக விளையாடுவேன் என மலிங்க கூறியுள்ளார்.

அத்துடன் இறுதி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு திலகரட்ண தில்ஷான் தேவை என்றும், ஆனால் தில்ஷானை இறுதி போட்டிகளுக்கு ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என கிரிக்கெட்தெரிவுக் குழு பதில் சொல்ல வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மலிங்கவின் மருத்துவ அறிக்கைகளை வைத்துக் கொண்டு தான் அவரை போட்டிகளுக்குதெரிவு செய்வது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கைகிரிக்கெட் தெரிவு குழுவின் தலைவர் சனத் ஜயசூரியதெரிவித்துள்ளார்.அத்துடன் மலிங்கவினால் விளையாட முடியும் என்றால் கிரிக்கெட் தெரிவு குழு அவரைதெரிவு செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

news_02-02-2016_65lasi

Related posts: