மயாமி ஓபன் டென்னிஸ்: கெர்பரை வீழ்த்திய வீனஸ்!

Saturday, April 1st, 2017

அமெரிக்காவில் நடக்கும் மயாமி ஓபன் டென்னிஸ்தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதிப் போட்டிகள் நேற்று முன்தினம் நடந்தன. இதில், நம்பர்-1 வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர், அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்சை எதிர்த்து விளையாடினார். வீனசின் அதிரடிக்கு ஈடு கொடுக்க முடியாத கெர்பர், 5-7, 3-6 என்ற நேர் செட்களில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.

மற்றொரு கால் இறுதியில், 3ம் நிலை வீராங்கனையான ரோமானியாவின் சிமோனா ஹாலேப்பை 3-6, 7-6, 6-2 என்ற செட்களில் இங்கிலாந்தின் ஜோகன்னா கோன்டா வென்றார்.ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ரஷ்யாவின் ரபெல் நடால் 6-2, 6-3 என்ற செட்களில் அமெரிக்காவின் ஜாக் சாக்கை வீழ்த்தினார்.


மாவட்ட  பாடசாலைகளுக்கிடையிலான துடுப்பாட்டம் - யாழ்.மத்தி – சென்.பற்றிக்ஸ் கல்லூரிகள் இறுதியாட்டத்தில...
இருபதுக்கு - 20  : விக்கெட் காப்பாளராகிறார் குசல் மென்டிஸ்
அணித்தலைவராக ரோஹித் !
சர்வதேச கிரிக்கெட்டில் சவாலாக விளங்கிய பந்துவீச்சாளர் - டோனி!
தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை − கலிஸ் கருத்து!