மன்னிப்பு கேட்ட ஐபிஎல் நாயகன் கிறிஸ் கெய்ல்!
Wednesday, May 10th, 2017இந்தியாவில் நடைபெற்று வரும் பத்தாவது ஐபிஎல் தொடரில் தோல்விகளை சந்தித்து வரும் பெங்களூரு அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இந்தியாவில் ஆண்டு தோறும் நடக்கும் ஐபிஎல் தொடர், பத்தாவது ஆண்டாக தற்போது நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் முடியும் தருவாயில் உள்ளதால், பவர் பிளேவுக்கு தகுதி பெற வேண்டும் என்று அணிகள் போட்டி போட்டுக் கொண்டு விளையாடி வருகின்றன.
ஆனால் இத்தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு அணி பரிதாப நிலையில் உள்ளது.
இதுவரை நடந்த போட்டிகளில் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றிப்பெற்று கடைசி இடத்தில் உள்ளது. பெங்களூர் அணியில் கெய்ல், கோஹ்லி, டிவில்லியர்ஸ் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இருந்தும் பெங்களூர் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.
இதுகுறித்து பேசிய ஐபிஎல் நாயகன் என்று வர்ணிக்கப்படும் கிறிஸ் கெய்ல் கூறுகையில், ரசிகர்களிடம் எனது மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன். தொடர் தோல்விகளுக்கு பின்னும் அவர்கள் மைதானத்துக்கு வருவது ஆச்சர்யமளிக்கிறது. கண்டிப்பாக அடுத்த தொடரில் சிறப்பாக விளையாடுவோம் என கூறியுள்ளார்.
Related posts:
|
|