மன்செஸ்டர் யுனைட்டெட் வெற்றி!

நேற்று இடம்பெற்ற பிறீமியர் லீக்கின் போட்டியில் மன்செஸ்டர் யுனைட்டெட் அணி வெற்றி பெற்றுள்ளது. சௌதாம்டன் அணிக்கெதிரான போட்டியிலேயே 2-0 என்ற கோல்கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் வெற்றி பெற்றுள்ளது.
மன்செஸ்டர் யுனைட்டெட் கழகத்தின் ஓல்ட் ட்ரஃபோர்ட் மைதானத்தில் இடம்பெற்ற இப்பருவகால முதலாவது பிறீமியர் லீக் போட்டியில், வலது பக்கத்திலிருந்து வெய்ன் ரூனி கொடுத்த பந்தை போட்டியின் 36ஆவது நிமிடத்தில் தலையால் முட்டி ஸல்டான் இப்ராஹிமோவிக் கோலாக்கியதோடு, 52ஆவது நிமிடத்தில் கிடைக்கப் பெற்ற பெனால்டியையும் கோலாக்கியிருந்தார்.
இப்போட்டியில், நான்கு வருடங்களுக்கு பிறகு மன்செஸ்டர் யுனைட்டெட் அணிக்குத் திரும்பிய, உலக சாதனைத் தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட போல் பொக்பா, ஏனைய வீரர்களை விட அதிமாக, எதிரணியின் பாதியில் பந்துகளை தொட்டிருந்ததுடன், அதிகமான பந்துப் பரிமாற்றங்களையும் மேற்கொண்டிருந்தார்.
Related posts:
|
|