மன்செஸ்டர் யுனைட்டெட் அணிக்கு ரொனால்டோ ஒப்பந்தமாவது சாத்தியமில்லை!

CR7 Monday, July 17th, 2017

மன்செஸ்டர் யுனைட்டெட் அணிக்கு, கிறிஸ்டியானோ ரொனால்டோவை ஒப்பந்தம் செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என, அவ்வணியின் முகாமையாளர் ஜொஸே மொரின்யோ, தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தக் கழகத்துக்காக அவர் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்ற பேச்சுகள் எழுந்திருந்த நிலையிலேயே, அதை அவர் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்டபோது, “சாத்தியமில்லாத வீரர்களைப் பற்றிச் சிந்தித்து, என்னுடைய நேரத்தை நான் வீணாக்கப் போவதில்லை” என்று தெரிவித்தார்.

யுனைட்டெட் அணி, பருவகாலத்துக்கு முன்னரான பயிற்சிகளுக்காக, ஐக்கிய அமெரிக்காவுக்குச் சென்றுள்ள நிலையிலேயே, அங்கு வைத்து இக்கருத்துகளை அவர் தெரிவித்தார். ஐ.அமெரிக்காவில், லொஸ் ஏஞ்சலஸ் கலக்ஸி அணிக்கெதிரான போட்டியில், 5-2 என்ற கோல் கணக்கில், யுனைட்டெட் அணி வெற்றிபெற்றது.


30595327_1734584803247266_6799777560008851456_n

போற போக்கைப் பார்த்தா நம்மிட பிறந்த தினங்களையும் மாத்திப்போடுவாங்க போல இருக்கு!…