மத்தியூஸ்  நீக்கம் தொடர்பில்  பயிற்சியாளர் விளக்கம்!

Friday, September 28th, 2018

இலங்கை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஏஞ்சலோ மேத்யூஸை நீக்கியது எதற்காக என்பது குறித்து இலங்கை அணியின் பயிற்சியாளர் ஹதுரசிங்க வெளியிட்டுள்ளார்.

ஆசியக் கோப்பையிலிருந்து படுதோல்வியடைந்து இலங்கை அணி வெளியேறிதும் கேப்டன் பொறுப்பில் இருந்து மேத்யூஸ் நீக்கப்பட்டார்.

இதுதொடர்பாக ஹதுரசிங்க வெளியிட்டுள்ள விளக்கத்தில், விக்கெட்டுகளுக்கிடையே ஓடுவதில் மேத்யூஸ் மந்தமாக இருப்பதோடு எதிர்முனை வீரர்களையும் ரன் அவுட் ஆக்கி ‘விக்கெட்டுகளை’ எடுத்து விடுகிறார்

ரன் அவுட்டில் இவர் பங்கேற்பாளராக இல்லை மாறாக எதிர்முனை பேட்ஸ்மென் ரன் அவுட் ஆவதற்கும் மேத்யூஸ் காரணமாக விளங்குகிறார்.

மேலும் 50 ஓவர்கள் களத்தில் பீல்ட் செய்வதற்கும் பிறகு பேட்டிங் செய்வதற்குமான உடற்தகுதி மேத்யூஸிடம் இல்லை.

அணி வீரர்களே அவரைச் சுமையாகக் கருதுகின்றனர்.

“64 ரன் அவுட்டுகளில் மேத்யூஸ் பங்கு உள்ளது, இதில் 49 முறை எதிர் முனை பேட்ஸ்மென் இவரால் ரன் அவுட் ஆகியுள்ளார். இது உலக சாதனை.

இது போன்ற விஷயங்களைத்தான் நாங்கள் பார்க்கிறோம். ஆனால் அவர் விரைவில் இந்தக் குறைகளைச் சரிசெய்து கொண்டு மீண்டும் இலங்கை கிரிக்கெட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்றே விரும்புகிறோம் என பயிற்சியாளர் கூறியுள்ளார்.

Related posts: