மத்தியூஸ் காயம்! ஹேரத் தலைவரானார்!

Monday, October 24th, 2016

 

சிம்பாப்வேயின் ஹராரே நகரில் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் தொடரில் ரங்கன ஹேரத் இலங்கை அணிக்கு தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் காயம் காரணமாக சிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என கூறப்பட்டுள்ளது.இதன் காரணமாக சிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் போட்டிக்கு ரங்கன ஹேரத் தலைவராக செயற்படவுள்ளார்.

மேலும், உப தலைவரான தினேஷ் சந்திமாலும் முன்னைய போட்டியில் ஏற்பட்ட உபாதை காரணமாக பங்குபற்ற மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் ஒருநாள் போட்டிகளின் போது மத்தியூஸை இணைத்துக்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

InmahwilhelpMathews

Related posts: