மத்தியுஸ் , சந்திமல் தென்னாபிரிக்க தொடருக்கு தகுதி!

Thursday, December 1st, 2016

இலங்கை அணியின் தலைவர் எஞ்சலோ மத்தியுஸ் மற்றும் உபத் தலைவர் சந்திமல் ஆகியோர் உபாதையிலிருந்து நீங்கியுள்ளதுடன், தென்னாபிரிக்க தொடருக்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மத்தியுஸ் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், சந்திமல் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் துஸ்மந்த சமீர ஆகியோர் உபாதைகளிலிருந்து குணமாகியுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தானும் தற்போது பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றேன்.இதேவேளை தம்மிக்க பிரசாத் உபாதைகளில் இருந்து நீங்குவதற்கு சற்று காலம் எடுக்கும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர் என்றார்.

Untitdddddddddddddled-1

Related posts: