மதுசனின் சகலதுறை ஆட்டத்தால் சம்பியனானது யாழ்.மத்திய கல்லூரி !

Thursday, October 6th, 2016

மதுசனின் அதிரடியான அரைச் சதமும் அபாரமான பந்துவீச்சும் கைக்கொடுக்க சென்.பற்றிக்ஸ் கல்லூரியை 117 ஓட்டங்களால் இலகுவாக வெற்றிகொண்டு 17வயதுப் பிரிவில் சம்பியனாகியது யாழ். மத்திய கல்லூரி.

யாழ்.மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்தினால் நடத்தப்பட்ட 17வயது பிரிவினருக்கான 50ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டம் நேற்று சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இவ் இறுதியாட்டத்தில் யாழ். மத்திய கல்லூரியை எதிர்த்து சென்.பற்றிக்ஸ் கல்லூரி மோதியது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ். மத்திய கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. இவ் அணி ஆரம்பத்தில் 40ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய வேளையில் ஜோடி சேர்ந்த மதுசன் – விதுசன் ஆகியோர் தமது பொறுமையான ஆட்டத்தின் மூலம் 108 ஓட்டங்களை இணைப்பாட்டங்களாக பெற்றுக் கொடுக்க மத்திய கல்லூரி 40.4ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 222ஓட்ங்களை பெற்றுக்கொண்டது. இதில் மதுசன் 62 பந்துகளில் 9பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 72, நிதர்சன் 34, தேனுஜன் 26,ஜெயதர்சன் 14 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர்.

453

பந்துவீச்சில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி சார்பில் றதீசன், அனோஜன் தலா 3, பற்றிக், அன்ரோ தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய  சென்.பற்றிக்ஸ் கல்லூரி எதிரணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாது 33.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 105 ஓட்டங்களை பெற்றுத் தோல்வியைத் தழுவியது. இவ்வணி சார்பில் பற்றிக் 29, ராஜபோல் 13, டில்சான் 10 ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் மத்திய கல்லூரி சார்பில் மதுசன் 7 ஓவர்கள் பந்துவீசி 21 ஓட்டங்களை கொடுத்து 3, குகசதுஸ் 8 ஓவர்கள் பந்துவீசி 13ஓட்டங்களை கொடுத்து 3, அனஸ்ராஜ், நிதுசன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். போட்டியின் ஆட்ட நாயகனாகவும் சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் மதுசன், சிறந்த பந்துவீச்சாளராக குகசதுஸ், சிறந்த களத் தடுப்பாளராக ஜவன் றொசாந்தன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

Untitled-2

Related posts: