மஞ்செஸ்டர் தாக்குதல் : கிரிக்கெட் தொடரை பாதிக்காது!

Sunday, May 28th, 2017

மஞ்செஸ்டர் தாக்குதல், இங்கிலாந்தில் நடைபெறும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரை பாதிக்காது என சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவின் தலைவர் ரொனி ஃபிளானகன் தெரிவித்துள்ளார்.

மஞ்செஸ்டர் தாக்குதலை தொடர்ந்து பிரித்தானியாவில் முக்கிய நிகழ்வுகளை நடத்துவது தொடர்பில் கேள்வி எழுந்திருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், தீவிரவாதிகளின் நோக்கத்தால் எந்த வகையிலும் இந்த போட்டிக்கு பாதிப்பு ஏற்படாது என்ற நம்பிக்கை எமக்குள்ளது.

இரசிகர்கள் அனைவரும் அச்சமின்றி போட்டி அரங்கிற்கு வந்து போட்டியை கண்டு களிக்கலாம். போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளும் பாதுகாப்பு குறித்து எவ்வித கேள்வியும் எழுப்பவில்லை. பயிற்சிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றன. வீரர்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. போட்டியை காணவரும் இரசிகர்களுக்கு பாதுகாப்பு சோதனை சற்று அதிகமாக காணப்படும் என்றார்.

Related posts: