மக்களின் தேசப்பற்றை புரிந்து கொள்ள முடியவில்லை: மஷ்ரஃப் மோர்டாசா

Friday, June 23rd, 2017

 

மக்களின் தேசப்பற்றின் வரையறையை தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லையென பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைவர் மஷ்ரஃப் மோர்டாசா தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் கூறுகையில்இ ”நான் ஒரு கிரிக்கெட் வீரன். ஆனால் என்னால் உயிரை காப்பாற்ற முடியுமா? வைத்தியரால்தான் உயிரை காப்பாற்ற முடியும். ஆனால் நாட்டின் சிறந்த வைத்தியரை யாரும் பாராட்டுவதில்லை.

ஒரு நடிகர் சம்பளம் வாங்கிக் கொண்டு வேலை செய்வதுபோல் நாங்கள் சம்பளம் வாங்கிக் கொண்டு விளையாடுகிறோம். இதைவிட மேலும் ஒன்றுமில்லை. சிலர் தேசப்பற்று தேசப்பற்று என்று கிரிக்கெட்டை சுற்றியே சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.கிரிக்கெட்டால் உங்களுடைய சக்தி வீணாகிவிடக்கூடாது. நேர்மையான வேலைக்காக அதனைப் பயன்படுத்த வேண்டும். மக்களின் தேசப்பற்றின் வரையறையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளார்.

Related posts: