மக்கல்லமின் அதிர்ஷ்டத்தை தட்டிப் பறித்த சங்கக்காரா!
Thursday, July 21st, 2016கரீபியன் பிரியமிர் லீக் போட்டியில் நேற்று முன்தினம் நடந்த 18வது லீக் போட்டியில் ஜமைக்கா டாலவாஸ்- டிரின்பகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் கிறிஸ் கெய்ல் தலைமையிலான ஜமைக்கா டாலவாஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 158 ஓட்டங்கள் எடுத்தது.இதன் பின்னர் 159 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய டிரின்பகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு தொடக்க வீரர்களாக அம்லா, பிராண்டன் மெக்கல்லம் களமிறங்கினர்.
மெக்கல்லம் எப்போதும் ஆரம்பத்திலே அதிரடி காட்ட ஆரம்பித்து விடுவார். இந்நிலையில் 2வது ஓவரின் முதல் பந்தை ஸ்லிப் பகுதியில் தட்டினார் மெக்கல்லம். ஆனால் பிடியாக சென்ற அதை விக்கெட் காப்பாளரான குமார் சங்கக்காரா தவறவிட்டார். ஆனால் இந்த அதிர்ஷ்டம் அவருக்கு நீண்ட நேரம் நிலைக்கவில்லை.
அடுத்த பந்தே ஒரு அடி இறங்கி சிக்சர் அடிக்க முயற்சித்த மெக்கல்லமின் அதிர்ஷ்டத்தை விக்கெட் காப்பாளரான குமார் சங்கக்காரா தட்டிப் பறித்தார்.அவரை நொடிப் பொழுதில் ஸ்டெம்பிங் செய்து 6 ஓட்டங்களில் வெளியேற்றினார் சங்கக்காரா. கெவோன் கூப்பருக்கும் அவர் அசத்தலாக ஒரு கேட்ச் பிடித்தார். இதனால் டிரின்பகோ நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 139 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
Related posts:
|
|