மகேந்திர சிங் தோனி இன்னும் இரண்டு வருடங்கள் வரை விளையாடுவார் – நம்பிக்கை தமக்குள்ளதாக மைக்கேல் ஹஸ்ஸி தெரிவிப்பு!

Saturday, May 18th, 2024

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் தலைவரான மகேந்திர சிங் தோனி இன்னும் இரண்டு வருடங்கள் வரை இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் விளையாடுவார் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாக அந்த அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.

மகேந்திர சிங் தோனி நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடருடன் ஓய்வை அறிவிப்பாரா? என மைக்கேல் ஹஸ்ஸியிடம் செய்தியாளர்கள் வினவியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த மைக்கேல் ஹஸ்ஸி, அவ்வாறான எண்ணம் தமக்கு இல்லை எனவும், குறைந்தது 2 வருடங்களாவது தோனி ஐ.பி.எல் தொடரில் தொடர்வார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அவருக்கு முழங்காலில் மேற்கொள்ளப்பட்டுள்ள அறுவை சிகிச்சை காரணமாகவே தோனி பின்வரிசை துடுப்பாட்ட வீரராக களமிறங்குகின்றார் எனவும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.

000

Related posts: