மகேந்திர சிங் தோணியே காரணம் கூறுகின்றார் டுவைன் பிராவோ !

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு அதன் தலைவராக செயற்படுகின்ற மகேந்திர சிங் தோணியே காரணம் என மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார்.
சமூகவலைத்தளம் ஒன்றின் நேரலையில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சிறந்த முடிவுகளை மேற்கொள்ளும் திறன் அவரிடம் காணப்படுவதாகவும் டுவைன் பிராவோ குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் மகேந்திர சிங் தோணியின் பெயர் அறிவிக்கப்படவில்லை.
2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள வீரர்களின் பட்டியலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை அணி வெற்றி!
அவுஸ்திரேலிய காட்டுத்தீ: பூமியை சுற்றி வலையத்தை ஏற்படுத்தும் – நாசா!
நியூஸிலாந்து அணி 9 இலக்குகளால் வெற்றி!
|
|