மகாஜனா சம்பியன்!

Thursday, July 19th, 2018

தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் முன்னாள் பிரபல கால்பந்தாட்டப் பயிற்றுநர் ரி.பி.பத்மநாதன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்துக்கான கால்பந்தாட்டத் தொடரில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணி கிண்ணம் வென்றது.

மகாஜனக் கல்லூரி மைதானத்தில் அண்மையில் இந்த இறுதியாட்டம் இடம்பெற்றது. நெல்லியடி மத்திய கல்லூரி அணியை எதிர்த்து தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணி மோதியது. நிர்ணயிக்கப்பட்ட நிமிடங்களில் இரண்டு அணிகளும் தலா 2 கோல்களைப் பதிவுசெய்ததை அடுத்து சமநிலைத் தவிர்ப்பு உதைகளில் வெற்றியைத் தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 4:2 என்ற கோல் கணக்கில் மகாஜனா கிண்ணம் வென்றது.

Related posts: