மகாஜனா அனிதாவிற்கு 3ஆவது பதக்கம்!

Monday, October 17th, 2016

வடக்கின் தங்க மங்கை என அழைக்கப்படும் மகாஜனக் கல்லூரி மாணவி அனித்தா ஈட்டி எறிதலில்; வெண்கலப் பதக்கத்தினை வென்று தனது பதக்க எண்ணிக்கையை 3ஆக மாற்றியுள்ளார்.

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தடகளப போட்டிகள் கண்டி போகம்பர மைதானத்தில் இடம்பெற்று வருகின்றன. இதில் நேற்று இடம்பெற்ற 21 வயதுப்பிரிவு பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பங்குபற்றிய இம்மாணவி 31 மீற்றர் தூரம் எறிந்து 3ஆம் இடத்தினைப் பெற்று வெண்கலப் பதக்கத்தினை வென்றுள்ளார்.

இதற்கு முன்னர் கோலூன்றிப் பாய்தலில் தங்கப் பதக்கத்தையும் 100மீற்றர் தடை தாண்டல் போட்டியில் வெண்கலப் பதக்கத்தினையும் இம் மாணவி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

17886anitha-jegatheeswaran-400

Related posts: