மகாஜனக் கல்லூரியை 7 விக்கெட்டினால் வீழ்த்தியது மானிப்பாய் இந்துக் கல்லூரி!

Thursday, January 18th, 2018

மானிப்பாய் இந்து ௲ தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி அணிகளுக்கிடையே இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியில் மானிப்பாய் இந்துக் கல்லூரி 7 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்று 2 ஆம் சுற்றுக்கு தகுதி பெற்றது.

இவ் இரு அணிகளுக்கும் இடையே இடம்பெற்ற போட்டி கடந்த வாரம் இடம்பெற்றது. முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மகாஜனக் கல்லூரி 43.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 101 ஓட்டங்களைப் பெற்றது. இதில் தயுஸ்ரன் 32, யனுசன் 25 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்து வீச்சில் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் கனிஸ்ரன் 17 ஓவர்கள் பந்து வீசி 35 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்டுக்களையும் யதுர்சன் 12.1 ஓவர்கள் வீசி 25 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். தொடர்ந்து முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மானிப்பாய் இந்துக் கல்லூரி 38.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 121 ஓட்டங்களைப் பெற்றது.

இதில் அனேசன் 32, நிலக்சன் 27, வதுசன் 22 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் மகாஜனா சார்பில் தயுஸ்ரன் 13.4 ஓவர்கள் பந்துவீசி 40 ஓட்டங்களைக் கொடுத்து 6 விக்கெட்டுக்களையும், யதுசன் 7 ஓவர்கள் பந்துவீசி 7 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். 2 ஆம் இனிங்ஸில் விளையாடிய மகாஜனக் கல்லூரி 38.3 ஓவர்களில் 85 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தனர். இதில் டினேஸ் 16, தயுஸ்ரன் 14 ஓட்டங்களைப் பெற்றனர். பந்து வீச்சில் மானிப்பாய் இந்துக் கல்லூரி சார்பில் அனோசன் 7 ஓவர்கள் பந்துவீசி 12 ஓட்டங்களைக் கொடுத்து 4, கனிஸ்ரன் 13 ஓவர்கள் பந்துவீசி 27 ஓட்டங்களைக் கொடுத்து 3, யதுர்சன் 14 ஓவர்கள் பந்துவீசி 23 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 66 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மானிப்பாய் இந்துக் கல்லூரி 3 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்து 7 விக்கெட்டினால் வெற்றி பெற்றது. இதில் கனிஸ்ரன் ஆட்டமிழக்காது 20, அனோசன் 19 ஓட்டங்களைப் பெற்றனர். தயுஸ்ரன் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். இவ் வெற்றியின் மூலம் மானிப்பாய் இந்துக் கல்லூரி 2 ஆம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

Related posts: