மகளிர் உலக கிண்ண கிரிக்கட் போட்டி ஆரம்பம்.
Saturday, June 24th, 2017எட்டு நாடுகள் பங்குகொள்ளும் 11 ஆவது சர்வதேச கிரிக்கட் சபையின் மகளிர் உலக கிண்ண கிரிக்கட் போட்டிகள் இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளன.
இலங்கை, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா, மேற்கிந்திய தீவுகள், பாக்கிஸ்தான் மற்றும் தென் ஆபிரிக்க ஆகிய அணிகள் பங்குகொள்ளும் இந்த போட்டிகள் 28 லீக் போட்டிகளை கொண்டதாக இருக்கும்
ஆரம்ப தினமான நாளைய தினம் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையோன போட்டி டார்பி மைதானத்தில் நடைபெறவுள்ளதுஅத்துடன், இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி பிரிஸ்டல் மைதானத்தில் நடைபெறுவுள்ளது
இலங்கை அணியின் சகலதுறை வீராங்கனையான முன்னாள் அணித்தலைவி ஷஷிகலா சிறிவர்தன மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளார்மேலும், தற்போதைய அணித்துலைவி இனோக்கா ரணவீர உட்பட்ட கடந்த 2013 உலக கிண்ண போட்டிகளில் விளையாடிய8 பேர் இம்முறையும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இதேவேளை,மகளீர் உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் இதுவரை ஐந்து நாடுகளில் நடத்தப்பட்டன கடந்த 10 முறைகள் இடம்பெற்ற போட்டிகளில் அவுஸ்திரேலிய அணி 6 தடவைகளும், நியூசிலாந்து அணி 3 தடவைகளும், இங்கிலாந்து ஒரு தடவையும் உலகக் கிண்ணத்தை சுவீகரித்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|