மகளிர் உலகக் கோப்பை: இலங்கை அணி வெற்றி

Sunday, July 16th, 2017

இங்கிலாந்தில் இடம்பெற்று வரும் மகளிர் வெற்றியாளர் கிண்ண போட்டியின், நேற்யை போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.பாக்கிஸ்தானுடன் மோதுண்ட குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்களை இழந்து 221 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.இதன்போது டிலானி மனோதரா 84 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாக்கிஸ்தான் அணி 46 .4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்களையும் இழந்து 206 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.இந்நிலையில் குறித்த போட்டியில் இலங்கை மகளிர் அணி வெற்றியை தனதாக்கியது.

Related posts: