மகளிர் உலகக் கிண்ண கால்பந்து தொடர் பிரான்ஸில்!

Saturday, July 21st, 2018

ரஷ்யாவில் உலகக் கிண்ண கால்பந்து தொடர் முடிந்த நிலையில், மகளிர் உலகக் கிண்ண கால்பந்து தொடர் அடுத்த ஆண்டு பிரான்ஸில் நடைபெற உள்ளது.
21ஆவது ஃபிபா உலகக் கிண்ண கால்பந்து தொடர், ரஷ்யாவில் நடந்து முடிந்தது. பிரான்ஸ் அணி 2ஆவது முறையாக இந்த கிண்ணத்தை கைப்பற்றியது.
இதனைத் தொடர்ந்து, அடுத்த உலகக் கிண்ண தொடர் (2022) கத்தார் நாட்டிலும், 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கிண்ண தொடர் அமெரிக்காவிலும் நடைபெற உள்ளன.
இந்நிலையில், மகளிர் உலகக் கிண்ண கால்பந்து தொடர் அடுத்த ஆண்டு பிரான்ஸில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 1991ஆம் ஆண்டு முதல் மகளிர் உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 7 முறை இந்த தொடர் நடைபெற்றுள்ளது.
கால்பந்து விளையாட்டிலும் பெண்களுக்கான முக்கியத்துவம் தரப்படாமல் இருந்த நிலையில், இந்த தொடரை பிரபலப்படுத்தும் நடவடிக்கையில் ஃபிபா அமைப்பு இறங்கியுள்ளது.
8வது மகளிர் உலகக் கிண்ண தொடர், ஏற்கனவே ஆடவர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள பிரான்ஸில் நடைபெற உள்ளதால், பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் போட்டியாக இது அமையும் என்று கூறப்படுகிறது.
இந்தத் தொடரில் 24 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த போட்டிகள் 2019ஆம் ஆண்டு ஜூன் 7 முதல் ஜூலை 7 வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளன.
இதுவரை மகளிர் உலகக் கிண்ணத்தை வென்ற நாடுகள்
• அமெரிக்கா (1991)
• நார்வே (1995)
• அமெரிக்கா(1999)
• ஜேர்மனி (2003)
• ஜேர்மனி (2007)
• ஜப்பான் (2011)
• அமெரிக்கா (2015)

Related posts: