போர்த்துக்கல் அணியில் ரொனால்டோ இல்லை!

Monday, August 29th, 2016

 

2018ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான தகுதிகாண் போட்டிகளுக்கான போர்த்துக்கல் குழாமில், அவ்வணியின் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம்பெறவில்லை என, அவ்வணியின் பயிற்றுநகர் பென்ணான்டோ சான்டொஸ் தெரிவித்துள்ளார்.

யூரோ கிண்ணப் போட்டிகளின் இறுதிப் போட்டியில், காயம் காரணமாக வெளியேறியிருந்த ரொனால்டோ, அந்த உபாதையிலிருந்து இன்னமும் குணமாகாத நிலையிலேயே, இக்குழாமில் இடம்பெறவில்லை.

24 பேர் கொண்ட குழாமாக அறிவிக்கப்பட்டுள்ள இக்குழாமில், அன்ட்ரே சில்வா, ஜோவா சான்செலோ ஆகியோர் அழைக்கப்பட்டுள்ள நிலையில், ஏனையோர், யூரோ கிண்ணத்துக்கான குழாமில் இடம்பெற்றவர்களாகவே உள்ளனர். கடந்த வியாழக்கிழமை, ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சிறந்த வீரருக்கான விருதை வென்ற ரொனால்டோ, கடந்த வாரமே தனது பயிற்சிகளை மீள ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: