போதை மருந்து பயன்படுத்தினார்களா வில்லியம்ஸ் சகோதரிகள் ?

Wednesday, September 14th, 2016

வில்லியம்ஸ் சகோதரிகள் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து அவர்களிடம் இருந்து பதக்கங்களை திரும்ப பெற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்விகள் எழுந்துள்ளது.

ரஷ்ய செய்தி நிறுவனம் ஒன்று, வில்லியம்ஸ் சகோதரிகள் மற்றும் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமொன் பைல்ஸ் ஊக்கமருந்து பயன்படுத்தியதாகவும், அவர்கள் பயன்படுத்திய ஊக்கமருந்தின் பட்டியலையும் செய்தியாக வெளியிட்டிருந்தது.

இதனையடுத்து வில்லியம் சகோதரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா எனவும் பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் அவர்கள் பெற்ற பதக்கங்களை திரும்ப பெறப்படுமா எனவும் விளையாட்டு ஆர்வலர்கள் இடையே கேள்விகள் எழுந்துள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இரு ரஷ்ய தடகள விளையாட்டு வீரர்களின் பதக்கங்கள் பறிக்கப்பட்டுள்ளன. மேலும், ரஷ்யாவில் ஊக்க மருந்து பயன்பாடு குறித்து குற்றச்சாட்டை வாடா குறிப்பிட்டதையடுத்து, ரியோ ஒலிம்பிகில் பங்கேற்க ரஷ்யாவின் தடகள விளையாட்டு வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இது குறித்த தகவல் வெளிவந்த பிறகே இவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ரஷ்யாவிலிருந்து சட்டவிரோதமான வகையில் சிலர் தமது கணினி வலையமைப்பில் புகுந்து தகவல்கள் திருடப்பட்டு வெளியிடுவதாக வாடா (ஊக்க மருந்து பயன்பாட்டுக்கு எதிரான சர்வதேச அமைப்பு) குற்றம் சாட்டியுள்ளது.

625.0.560.320.500.400.194.800.668.160.90

Related posts: