போட்டி நிர்ணயம்: இலங்கை முன்னாள் வீரர்கள் இருவர் தொடர்பு!
Saturday, May 11th, 2019இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான அவஷ்கா குணவர்த்தன மற்றும் நுவன் சோய்சா மேட்ச் பிக்சிங்கில் ஈடுப்பட்டதாக சர்வதேச கிரிக்கெட் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி10 லீக் போட்டியில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் முன்னாள் பந்து வீச்சாளரான நுவன் சோய்சா, ஐசிசி-யின் ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக மூன்று பிரிவுகளில் குற்றம்சாட்டப்பட்டு கடந்த நவம்பர் மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டார். தற்போது நான்காவது பிரிவாக ஐக்கிய அரபு அமீரகத்தின் ஊழல் தடுப்பு விதியை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இலங்கை அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்டகாரரான அவஷ்கா குணவர்த்தன மீது இரண்டு பிரிவுகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இருவரும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் 14 நாட்களுக்குள் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க ஐசிசி அவகாசம் அளித்துள்ளது.
Related posts:
|
|