போட்டியில் இருந்து விலகினார் லசித் அம்புள்தெனிய!

Friday, February 22nd, 2019

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் லசித் எம்புல்தெனியவின் இடது பெருவிரலில் ஏற்பட்ட உபாதை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இலங்கை அணி வீரர் லசித் அம்புள்தெனிய, தென்னாபிரிக்காவுக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

பந்து தாக்கியதனை தொடர்ந்து இரத்தம் வெளியேறிய நிலையில் உடனடியாக லசித் எம்புல்தெனிய விளையாட்டரங்கில் இருந்து மருத்துவரினால் வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: