போட்டிகளில் இருந்து விலகிய தவான்!

Friday, September 15th, 2017

இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிக்களுக்கிடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது.இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான தவான் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான 3 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். ஏனெனில் அவரின் மனைவி ஆயிஷா உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால், அணியில் இருந்து தன்னை விடுவிக்கும்படி இந்திய கிரிக்கெட் வாரியத்தை கேட்டுக் கொண்டுள்ளார்

அதை கிரிக்கெட் வாரியமும் ஏற்றுக்கொண்டதால் முதல் 3 ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.தவான் இதற்கு முன்னர் இலங்கை அணிக்கெதிரான கடைசி ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டியில் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: