போட்டிகளிலிருந்து தென்னாபிரிக்க அணித் தலைவர் நீக்கம்!

Tuesday, August 7th, 2018

இலங்கை அணிக்கு எதிரான அடுத்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் தென்னாபிரிக்க அணித் தலைவர் பஃப் டு பிளெசிஸ் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரது வலது தோளில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் 10ஆவது ஓவரில் பிடியெடுப்பை மேற்கொள்ள முனைந்தபோது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதில் இருந்து குணமாக அவருக்கு 06 வாரங்கள் தேவை என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் எஞ்சியுள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளிலும், 20க்கு 20 போட்டியிலும் அவர் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: