பொதுநலவாய விளையாட்டு போட்டியில் பதக்கங்களை வென்ற இலங்கை வீரர்களுக்கு பணப்பரிசு!

21ஆவது பொதுநலவாய விளையாட்டுக்களில் இலங்கைக்காக பதக்கங்களை வென்ற வீர வீராங்கனைகளுக்கு பணப்பரிசுகள் வழங்கும் வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனதலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இம்முறை பொதுநலவாய விளையாட்டுக்களில் இலங்கை ஒரு வௌ்ளிப் பதக்கம் மற்றும் 5 வெங்கலப்பதக்கங்களை பெற்றது. இதுவரை இலங்கை பொதுநலவாயவிளையாட்டுக்களில் பெற்றுக்கொண்ட அதி கூடிய பதக்கங்கள் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
பளு தூக்கும் போட்டியில் வௌ்ளிப்பதக்கம் வென்ற இந்திக திஸாநாயக்கவிற்கு 40 இலட்சம் ரூபாவும், வெண்கலப்பதக்கங்களை வென்ற மற்றைய வீரர்களுக்கு தலா 30 இலட்சம்ரூபாவும் இதன் போது பரிசளிக்கப்பட்டது.
Related posts:
டென்னிஸ்: சாதனை படைத்த ரஷ்ய வீரர்!
யாழ் பல்கலை அணி வெற்றி!
300 பந்துகளை 3 முறை சந்தித்து சண்டிமல் சாதனை!
|
|